vkrnajur vkrnajur Author
Title: முதல்வருக்கு பிறந்த நாள் பரிசு விளம்பரம்! - திமுக
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு திமுக சார்பில் அவருக்கு நாளிதழ்கள் விளம்பரம் மூலம் அதிர்சிசயை பரிசாக கொடுத்துள்ளது.   இது...
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு திமுக சார்பில் அவருக்கு நாளிதழ்கள் விளம்பரம் மூலம் அதிர்சிசயை பரிசாக கொடுத்துள்ளது.  

இது குறித்து, திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பார்க்க முடியாத முதலமைச்சர் வேண்டுமா? தேர்தல் தவிர கடந்த 5 வருடத்தில் ஒரு முறை கூட எந்த மாவட்டத்திற்கும் போகாத முதலமைச்சர் வேண்டுமா? மழை வெள்ள சேதத்தில் சிக்கி துயரத்தில் தவித்த மக்களை ஒரே ஒரு முறை ஹெலிகாப்டரில் பார்த்த முதலமைச்சர் வேண்டுமா? கட் அவுட்களிலும், ஸ்டிக்கரிலும் மட்டும் பார்க்கும் முதலமைச்சர் நமக்கு வேண்டுமா? முடியட்டும்   விடியட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரம் தமிழகத்தில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் மற்றும் பிற மொழி நாளிழ்களில் திமுக சார்பில் கொடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக சட்ட சபையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மருகன் சபரீசன் குறித்து அதிமுகவினர் பேசி, திமுகவை சீண்டிறினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கும் விதமாகவும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாம். இந்த விளம்பரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு உளவுத்துறை போலீசார் கொண்டு சென்றதாவும், இதைக் கேட்டு முதல்வர் கடும் கோபம் கொண்டுள்ளதாகவும் கூறப்புகிறது. எனவே, திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ஏடான நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் மு.க.ஸ்டாலின் மற்றும் சபரீசன் குறித்த அதிரடியை விரைவில் காணலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top