vkrnajur vkrnajur Author
Title: தொலைகாட்சியிருந்து இணைதளத்திற்கு மாறும் குழந்தைகள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகளவில் குழந்தைகளின் மனநிலையை ஆய்வு செய்வது என்பது ஒரு வித தவம் போன்றது. ஏனெனில் அவர்களது மனம் ஒருநிலையில் இருக்காது. அதை விட முக்கியம் அ...
உலகளவில் குழந்தைகளின் மனநிலையை ஆய்வு செய்வது என்பது ஒரு வித தவம் போன்றது. ஏனெனில் அவர்களது மனம் ஒருநிலையில் இருக்காது. அதை விட முக்கியம் அவர்களது ரசனையும் அடிக்கடி மாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் குறிப்பிட்ட ரசனைகளை மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒரு வேலைதான். ஆனால் ஒரு சமீபகாலமாக அவர்களது ரசனை மாறிவருவதற்குத் தொழில்நுட்பமும் ஒரு காரணமாக அமைகிறது.
முதலில் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பேட்டிகள் இருக்கும்.ஏனெனில் குழந்தைகள் கார்டூன் மற்றும் குழந்தைகள் படங்களைப் பார்க்கும் பொது பெரியவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது என்பதால் தனித்தியாக தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சமீப காலமாகக் குழந்தைகள் அறையில் உள்ள தொலைக்காட்சி பேட்டிகள் அமைதியாகவே இருக்கின்றன. அதற்கு முக்கியகாரணம் இணையதளம் (இன்டர்நெட்) பயன்பாடு அதிகரித்து அதற்கு உண்டான கட்டணம் குறைந்ததே ஆகும்.
குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குழந்தைகளுக்கு தனித்தனியாக ஒரு டேப்லெட் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.இதை வை.பை. இணைப்புடன் இணைத்து அதில் தங்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையே விரும்புகின்றனர். இது குறித்து பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு குழந்தையும் நாள் ஒன்றிற்கு சுமார் 3 மணிநேரம் செலவிட்டதாகவும் ஆனால் அது தற்போது 2 மணிநேரமாகக் குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், பத்து ஆண்டுகளுக்கு முன் நாள் ஒன்றிக்குக் குழந்தைகள் ஒரு மணிநேரம் இணையத்தைப் பார்த்தனர் என்ற நிலை மாறி தற்போது நாள் ஒன்றிக்கு சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் பார்க்கின்றனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கைப்பேசி சாதனங்களின் விலை குறைவு, இணைய இணைப்பின் கட்டணம் குறைப்பு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளன.மேலும் வீடு மற்றும் கடைகளில் வை.பை வசதி மூலம் குழந்தைகள் இலவசமாக இணைய இணைப்பைப் பெறுவதால் அவர்கள் தொலைக்காட்சி பெட்டியை விட்டு இணைய இணைப்பைக் காண்கின்றனர். அது மட்டுமின்றி இணையத்தை பயன்படுத்தும்போது அது அவர்கள் விரும்பிப் பார்க்கும் எந்த ஒரு விசையத்தையும் யாரும் தடை போடமுடியாது என்பதும் ஒரு காரணம். குறிப்பாகச் சமீபத்தில் 2,000 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் இணையதளத்தில் அதிகளவாக 58 சதவிகிதம் பேர் யூ டியூப் பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பலர் இசை, வேடிக்கையான நிகழ்வுகள் மற்றும் ஒரு செயலை அல்லது பொருளை செய்வது எப்படி என்ற நிகழ்வுகளைக் காண்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்புகள் அனைத்துமே 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளிடம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இணையத்திலேயே குழந்திகளுக்கு தேவையான அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வருவதாலும், தங்களுக்குத் தேவையான பொருட்களின் விலை, கிடைக்கும் இடம், அதன் தரம் உள்ளிட்ட அனைத்தையும் விரைவில் தெரிந்துகொள்ளலாம் என்பதுமே தற்போது குழந்தைகளை இணையத்தின் பக்கம் அழைத்துச் செல்வதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் குழந்தைகளிடம் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் அறவே குறைந்துவிடும் எனவும் அதற்கு அனைத்துப் பகுதிகளிலும் இலவச வை.பை இணைப்பைப் பல நிறுவனங்கள் கொடுக்க இருப்பதுமே காரணம் எனத் தெரிவிக்கின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top