vkrnajur vkrnajur Author
Title: மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின், புதிய நூலகம் பற்றிய ஓர் அறிமுகம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மதீனாவில் அமைந்திருக்கும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஒரு மாபெரும் நூல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது , ஏற்கனவே இருந்த நூலகத்...
மதீனாவில் அமைந்திருக்கும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஒரு மாபெரும் நூல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது , ஏற்கனவே இருந்த நூலகத்துல் இட வசதி , தொழில்நுட்ப வசதிகள் போதாமையின் காரணாமகவே இப் புதிய வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது .
இது தற்பொழுது புதுப் பொலிவுடனும் , உச்ச கட்ட தொழில்நுட்ப வசதிகளும்  நிறைந்த ஒரு நூல் நிலையமாக பிரகாசிக்கின்றது .

ஒரு புத்தகம் இரவல் எடுக்க வேண்டுமெனில் அங்குள்ள பதிவு இயந்திரத்தில் எமது பல்கலைக்கழக மாணவ அட்டையின் இலக்கங்களை பதிந்த பிறகு புத்தகத்தை scan செய்ததும் இரவல் பெற்றுக் கொள்ள முடியும் , இவ்விரவலின் காலம் இரண்டு கிழமையையே ஆகும் .

அவ்வாறே ஒரு புத்தகத்தை PDF முறையில் பெற்றுக் கொள்வதற்கு எமக்குத் தேவையான நூலை கொண்டு சென்று அங்கு scan க்கு என்று உள்ள ஒரு இயந்திரத்தில் scan செய்து அவற்றை pen drive இல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் .

மேலும் அக்காலம் தொட்டுள்ள முன் சென்ற அறிஞர்களின் கேயேடுகளின் மூலப் பிரதிகள் நிறையவே காணப்படுகின்றன .
சிறந்த முறையில் ஒவ்வொரு துறைக்கான நூற்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு , நேர்த்தியான வகையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. மாணவர்கள் மாத்திரமன்றி பொது மக்களும் பயனளிக்கும் வகையில் எல்லோருக்கும் பொதுவாக அமைந்திருப்பது இதன் விஷேட அம்சம் எனலாம் .

மூன்று மாடிகளைக் கொண்ட இந் நூல் நிலையம் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் அமைந்திருப்பதோடு " அல் மக்தபதுல் மர்கஸிய்யா " எனும் புதிய பெயருடன் காட்சியளிக்கின்றது .
சுமார் 25,000  மாணவர்களைக் கொண்ட இப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வெவ்வேறு பீடங்களில் பிரத்தியேகமான சிறு நூல் நிலையங்களும் அமையப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது .

ஆக இவ்வாறு பல இலட்சக் கணக்கான புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந் நூலகத்தின் நோக்கம் அனைவரும் பயன் பெற்று சிறந்த அறிவாளிகளாக பிரதிபலிப்பதே ஆகும் .

அனைவரும் இவ்வாறான நூலகத்திலிருந்து பயனடைந்து சமூகத்திற்கு பிரயோசனம் அளிக்கும் வகையில் செயற்படுவோம் .

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top