vkrnajur vkrnajur Author
Title: மலையை காணவில்லை என நீதி மன்றத்தில் புகார்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தேனியில் மலையை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேல் கண்ணும்...
தேனியில் மலையை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேல் கண்ணும் கண்ணும் என்ற படத்தில் கிணற்றை காணவில்லை என்று புகார் கூறும் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த காமெடியைத் தொடர்ந்து விஏஓ அலுவலகம் காணவில்லை, எங்கள் கிணற்றை காணவில்லை என கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட பல சம்பவங்கள் அரங்கேறின.
அந்த வகையில் மலையை காணவில்லை என்று விநோத வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. ஜெபமணிமோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேனி ஆட்சியர் அலுவலகம் பின்னால் இருந்த 250 அடி உயர மலையை காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 160 ஏக்கர பரப்பளவில் இருந்த மலை கிராவல் மண்ணுக்காக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியர், மண்ணியல்துறை இயக்குனரிடம் கடந்த 2013ல் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார். ஜெபமணிமோகன்ராஜ் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

ஒரு மாதத்துக்குள் மலை குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்து வைத்தது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top