vkrnajur vkrnajur Author
Title: தென்னாப்பிரிக்கா சென்ற விமானத்தில் கோடிக்கணக்கான பணம், சடலம் கண்டுபிடிப்பு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக்கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.   தென்...
ஜிம்பாவே நாட்டில் ஒரு சரக்கு விமானத்தில் கோடிக்கணக்கான தென்னாப்பிரிக்க பணமும் சடலம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  


தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டபோது, அந்த விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் தலைநகர் ஹராரேவிலிருந்து வெளியாகும் தி ஹெரால்ட் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

இந்த விவகாரத்தைத் தற்போது காவல்துறையினர் விசாரித்துவருவதாக ஜிம்பாவேயின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் தென்னாப்பிரிக்காவின் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானவை என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான சரக்கை எடுத்துச் சென்ற விமானம் ஒன்று ஹராரேவில் நிறுத்தப்பட்டபோது, அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டதைடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது என தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரியான பிரதீப் மகராஜ் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் உள்ள பணத்தை விடுவித்து தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பச் செய்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது என பிபிசியிடம் அவர் கூறினார்.

ஃப்ளோரிடாவில் இருந்து இயங்கும் வெஸ்டர்ன் குளோபல் ஏர்லைன்சிற்குச் சொந்தமான இந்த விமானம் ஜெர்மனியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்தது. எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக ஹராரேவில் இறங்குவதற்கு அனுமதி கேட்டு, அங்கே இறங்கியது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top