Mohamed Farook Mohamed Farook Author
Title: எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா நன்றி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தனது நன்றியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துக்கொண்டார். தமிழக சட்டப்பேரவ...
காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தனது நன்றியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துக்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ”இந்த 14-வது சட்டமன்றப் பேரவையின் இறுதி கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் அறிவிப்புகளை வெளியிட்டதில் பெரும் மன நிறைவு அடைகிறேன்.

இந்த 14-வது சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் என்ற முறையில் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பல சமயங்களில் விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தங்கள் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்றம் என்பது மக்களாட்சியின் மகத்துவம் ஆகும். அனைத்து மக்களுக்கும் நன்மை புரிய நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு இது. இந்த சட்டமன்றத்தில் நடுநிலை தவறாது பணியாற்றிய சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top