vkrnajur vkrnajur Author
Title: புதிய கட்சி தொடங்கினார் தமிமுன் அன்சாரி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு பிரிவாக செயல்பட்ட தமீமுன் அன்சாரி புதிய கட்சியை தொடங்கினார்.   கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனித...
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு பிரிவாக செயல்பட்ட தமீமுன் அன்சாரி புதிய கட்சியை தொடங்கினார்.  


கடந்த சில தினங்களுக்கு முன்பு, மனிதநேய மக்கள் கட்சியின் சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஜவாருல்லா அறிவித்தார்.

இதனால், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக் குழு (போட்டி கூட்டம்) தமிமுன் அன்சாரி தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. அப்போது பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்பு தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம்  கூறுகையில், இங்கே நடைபெற்ற பொதுக்குழுதான் மனிதநேய மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ  பொதுக்குழு ஆகும். மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் 1,500 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சட்டிப்படி நாங்கள் தான் உண்மையான மனிதநேய மக்கள் கட்சி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் கொடி, சின்னங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்றார். இதன் மூலம் மனிதநேய மக்கள் கட்சி பிளவுபட்டது.

இந்த நிலையில், கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை அன்சாரி தொடங்கினார். இதற்கான அறிவிப்பைமுறைப்படி அறிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top