vkrnajur vkrnajur Author
Title: நடுவரை சுட்டுக்கொன்ற வீரர்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அர்ஜென்டினாவில், உள்ளூர் கால்பந்து போட்டியில், ஒழுங்கீனமாக செயல்பட்ட வீரருக்கு ரெட் கார்டு காட்டியதால் ரெப்ரியாக செயல்பட்டவர் சுட்டுக்...
அர்ஜென்டினாவில், உள்ளூர் கால்பந்து போட்டியில், ஒழுங்கீனமாக செயல்பட்ட வீரருக்கு ரெட் கார்டு காட்டியதால் ரெப்ரியாக செயல்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார். இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
ஆத்திரம் அடைந்த அந்த வீரர் மைதானத்தை விட்டு நடுவரை திட்டியபடியே வெளியேறினார். தனது அறைக்கு சென்ற அவர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு மைதானத்துக்குள் சென்று தன்னை வெளியேற்றிய நடுவரை சரமாரியாக சுட்டார். இதில் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும் ஒரு வீரர் மீது குண்டு பாய்ந்தது.
போட்டி நடந்து கொண்டு இருக்கும்போதே நடுவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டு மற்ற வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த வீரர் தப்பி ஓடிவிட்டார். நடுவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். காயம் அடைந்த வீரர் உயிர் பிழைத்து விட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top