Mohammed Farook Mohammed Farook Author
Title: தத்துவ ஞானியிடம் ஒரு கேள்வி ? பெண் பார்ப்பது எப்படி!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தேர்வு  செய...
ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தேர்வு  செய்ய வேண்டும்...? என்று சொல்லித் தாருங்கள் என்றான்.
அதற்கு அவர்
அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .
அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .
உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .
குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.
பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்
மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய்
வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்
கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய்
படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்
படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள்
பணக்காரியை முடிக்காதே ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள்
ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்
அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்
கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்
அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள்
ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்
அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள்
ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்
ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள்
தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும்
என்று உபதேசித்தார்
வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே ! என்றான் கோபத்துடன் .
படிப்பினை :
எல்லா நலவுகளிலும் ஒரு சில கெடுதிகள் இருக்கும்
அதற்காக முழு நலவையும் விட்டு விடக்கூடாது . எதிலும் நடுத்தரமானதே சிறந்தது!!!!!
இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top