vkrnajur vkrnajur Author
Title: வரதட்சணையாக கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பைத்தாபுரா என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் பாரதியாதவ்(24). இவருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பண...
ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பைத்தாபுரா என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் பாரதியாதவ்(24). இவருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் சம்புதாயாள் என்பவருக்கும் இடையே திருமணம் செய்வதாய் உறுதியானது.   
இந்த திருமணத்திற்கு வரதட்சணையாக மாப்பிள்ளைக்கு ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி தரவேண்டும் என்று மணமகண் வீட்டின் சார்பாக கோரிக்கை விடப்பட்டது.  அப்படியில்லை எனில் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், திருமணமாகி ஆறு மாதத்திற்குள் காரை வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தமும் போட்டுள்ளனர்.   
ஆனால், விலை உயர்ந்த காரை தன்னால் வாங்கி கொடுக்க முடியாது என்று பாரதியின் தந்தை கூறியுள்ளார். ஆனாலும், திருமணம் நடக்கவேண்டும் என்றால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அன்று, ஏராளாமன பொருட்களோடு ஒரு புதிய மோட்டர் சைக்கிளையும் பாரதியின் தந்தை மணமகனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். இருந்தாலும், மணமகன் விட்டார் காரை கேட்டு அவரை தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.  
இதனால் கோபமடைந்த பாரதி, கடந்த வியாழக்கிழமை காவல் நிலையம் சென்று, அந்த மணமகன் விட்டார் மேல் வரதட்சணை புகார் கொடுத்தார். மேலும் நடக்கவிருந்த திருமணத்தையே நிறுத்தி விட்டார்.  வழக்கைப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.  
அந்த திருமணம் நாளை (பிப்ரவரி 22) நடக்கவிருந்த நிலையில், மணமகளே அதை நிறுத்திய விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top