vkrnajur vkrnajur Author
Title: புனித கஃபாவை சூழ, நிழல் ஏற்படுத்த திட்டம் .
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
புனித கஃபாவை சூழ வலம்வரும் (தவாப்) அல்லது தொழுகை செய்யும் யாத்திரிகர்களுக்கு சூரிய வெப்பத்தை மறைக்கும் வகையில் மத்அப் பகுதியில் நிழல் ...
புனித கஃபாவை சூழ வலம்வரும் (தவாப்) அல்லது தொழுகை செய்யும் யாத்திரிகர்களுக்கு சூரிய வெப்பத்தை மறைக்கும் வகையில் மத்அப் பகுதியில் நிழல் ஏற்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய இரு புனித பள்ளிவாசல்களின் நிர்வாகத் தலைவர் ஷெய்க் அப்துல் ரஹ்மான், நிதி அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் பெரிய பள்ளிவாசல் திட்டக் குழுவின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக சவூதி அரேபிய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் குறிப்பாக கோடை காலத்தில் சுடும் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைப்பட்டிருக்கும் விரியும் குடை யாத்திரிகர்களுக்கு அதிக பயன்தரக் கூடியதாக இருப்பதாக கருதப்படுகிறது. அவ்வாறான ஒரு முறை குறித்தே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

மக்கா பெரிய பள்ளிவாசல் விரிவுபடுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதன்படி மத்அப் பகுதியும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top