vkrnajur vkrnajur Author
Title: பாகிஸ்தான் நாட்டில் காதலர் தினம் தடை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலான “காதலர் தினம்” கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 14-ந் தேதி ...
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலான “காதலர் தினம்” கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 14-ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே போல பாகிஸ்தானிலும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தினம் கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இது சம்பந்தமாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவர்கள் மூலம் தடை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top