vkrnajur vkrnajur Author
Title: பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண்கல், ஆபத்து!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண் கல் அடுத்த மாதம் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பநிலை 8° செல்சியஸ் ஆல் குறைவடையும் என விஞ்...
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண் கல் அடுத்த மாதம் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பநிலை 8° செல்சியஸ் ஆல் குறைவடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் 28 ஆம் திகதி பூமியை தாக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த விண் கல் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பம் உறை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் பல லட்சக் கணக்கான கற்கள் சஞ்சரித்து உலாவருகிறது. இதில் பூமிக்கு அருகாமையில் சஞ்சரிக்கும் சுமார் 12,000 விண் கற்களை , நாசா விண்வெளி நிலையம் அவதானித்து வருகிறது. குறித்த இந்த விண் கல் சுமார் 1 கிலோ மீட்டர் அகலம் கொண்டது என்றும் இது பூமியை தாக்க மிகவும் அரிய சந்தர்ப்பமே உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் அது கடலில் விழுவதற்கு பதிலாக பூமியின் தரையில் மோதினால் அதில் இருந்து உண்டாகும் புகை மண்டலம் 10 ஆண்டுகளாக வளிமண்டலத்தில் இருக்கும் என்றும் தூசித் துகள்கள் அடங்கி மீண்டும் பூமியில் வாழ 6 ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் குறித்த தூசித் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் மோதி சூரிய ஒளியின் அளவை குறைத்து விடும் என்றும் வளிமண்டலத்தில் ஓசோன் படலமும் 55 சதவீதம் குறைந்துவிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top