vkrnajur vkrnajur Author
Title: பூகம்பத்தை முன்னறிவிக்கும் கைத்தொலைபேசி செயலி..
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பூகம்பத்தை முன்கூட்டியே தெரிவிக்கும், கைத்தொலைபேசிச் செயலி ‘application’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘மை ஷேக்’ என்ற, கைத்தொலைபேசிச் செ...
பூகம்பத்தை முன்கூட்டியே தெரிவிக்கும், கைத்தொலைபேசிச் செயலி ‘application’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘மை ஷேக்’ என்ற, கைத்தொலைபேசிச் செயலியை, பதிவிறக்கம் செய்து கொண்டால், பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே, எச்சரிக்கை செய்தியாக அளிக்கும் என்று இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ரிக்டர் ஸ்கேல்’ எனப்படும், பூகம்ப அளவீடு கருவி அளவுக்கு இல்லை என்றாலும், சிறப்பான முறையில் இந்த செயலி செயல்படும் என்று தெரிவிக்கும் இதன் தயாரிப்பாளர்கள், ‘தரையில், 10 கிலோ மீட்டருக்கு மேல் ஏற்படும் பூகம்ப அதிர்வுகளை, இந்த செயலி உணரும்,’ என்கின்றனர்.
அதற்காக இதில், ‘ஆக்சிலோ மீட்டர்ஸ்’ எனப்படும், உணர்வு தொழில்நுட்பம் இருப்பதாக கூறுகின்றனர். எனினும், இதன் உண்மைத்தன்மை, பூகம்ப ஆய்வு வல்லுனர்களால் உறுதிபடுத்தப்படவில்லை. பல நாடுகளைச் சேர்ந்த, பூகம்ப அறிவியல் வல்லுனர்கள் இந்தப் செயலியைத் தயாரித்துள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., விவேகக் கைத்தொலைபேசிகளில் இந்தப் செயலியைப் பயன்படுத்தலாம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top