vkrnajur vkrnajur Author
Title: தலையில் 7 அடி கம்பி பாய்ந்த வாலிபர் அறுவை சிகிச்சை பின் உயிர்ப்பிழைத்தார்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கட்டுமாண பணியின்போது தொழிலாளியின் தலையில் 7 அடி நீள இரும்பு கம்பி பாய்ந்தது அதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய...
கட்டுமாண பணியின்போது தொழிலாளியின் தலையில் 7 அடி நீள இரும்பு கம்பி பாய்ந்தது அதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மும்பையிலுள்ள மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த கட்டுமாணப் பணியில், சிமெண்டு கலவை செய்யும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் இருந்து 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ஒன்று தவறி கீழே விழுந்தது. வேகமாக பாய்ந்து வந்த அந்த கம்பி, கீழே வேலை செய்து கொண்டிருந்த கட்டுமாண தொழிலாளி முகமது குட்டு என்பவரின் தலையில் பாய்ந்தது.
அந்த கம்பி தலையில் குத்தி மண்டை ஓட்டுக்குள் புகுந்து தலையின் பின்பக்கமாக வெளியே வந்தது. இதனால், தொழிலாளி முகமது குட்டு சுருண்டு கீழே விழுந்து வேதனையில் அலரித் துடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து அவர், மேல் சிகிச்சைக்காக சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது குட்டுவின் தலையில் அறுவை சிகிச்சை செய்யும் பணியில் ஈபட்டனர். இது மிகவும் கடினமாக பணி என்பதால், மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் இதை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. அப்போது, முகமது குட்டுவின் தலையில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இது குறித்து அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், “இது மிகவும் கடினமான மற்றும் சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது. எனவே, மிகுந்த கவனத்துடன் இதை செய்தோம். அவரது மண்டை ஓட்டில் பாய்ந்திருந்த அந்த இரும்பு கம்பியை அகற்றினோம். தலையில் பாய்ந்த அந்த கம்பி மூளையில் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், முகமது குட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் உடல் நலம் தேறிவர 2 வார காலம் ஆகும். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயப்படும் விதமாக எதும் இல்லை.” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில், அந்த தொழிலாளிக்கு வெற்றி கரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அவரது குடும்பத்தினரும், உடன் பணியாற்றும் தொழிலாளர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top