vkrnajur vkrnajur Author
Title: வினாடிக்கு 6 லட்சம் பேர் வருகையால் இணையதளம் முடங்கியது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகின் மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்றுள்ள ப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு 24 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரிங்கி...
உலகின் மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெயரை பெற்றுள்ள ப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு 24 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரிங்கிங் பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு போனை தயாரித்துள்ளது ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம். ப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த போனின் விலை 251 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ப்ரீடம் 251 நேற்று மாலை டெல்லியில் வெளியிடப்பட்டது. ப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு இன்று காலை 6 மணி முதல் http://freedom251.com/ என்ற இணையதளத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போனை வாங்க விரும்பியவர்கள் அலாராம் வைத்து காலை 6 மணிக்கு முன் எழுந்து freedom251.com சென்று பார்த்தால், 6 மணிக்கு முன்பாக அந்த இணையதளம் முடங்கிவிட்டது.
இந்நிலையில் ப்ரீடம் 251 நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒரு வினாடிக்கு 6 லட்சம் பேர் வருகையால் இணையதளத்தின் சர்வர் முடங்கிவிட்டது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் மீண்டும் முன்பதிவு தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனின் விலை 251 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், டெலிவரி சார்ஜ் 40 ரூபாயையும் சேர்த்து மொத்தமாக ரூ. 291 செலுத்த வேண்டும். பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக முன்பதிவு செய்துவிட்டாலும் போன் உங்கள் கைக்கு வருவதற்கு குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனின் விலை ரூ.251. நான்கு இன்ஞ் திரை, 1.3GHz Quad-core பிராஸசர், 1 ஜிபி ரேம், 8 ஜி.பி. உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ள முடியும்), 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம் மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது.
இது ஒரு ஆண்டு வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்படவுள்ளன.
ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனின் விலை ரூ.251. நான்கு இன்ஞ் திரை, 1.3GHz Quad-core பிராஸசர், 1 ஜிபி ரேம், 8 ஜி.பி. உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ள முடியும்), 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம் மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது. இது ஒரு ஆண்டு வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்படவுள்ளன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top