vkrnajur vkrnajur Author
Title: விமானத்தில் கோளாறு அமைச்சர் மற்றும் எம்.பி உள்பட 66 பேர் சாதுயத்தால் உயிர் தப்பினர் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் தினமும் 3 நேரம் விமான சேவை இயக்கப்பட்டு வருக...
சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் தினமும் 3 நேரம் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இரவில் இயக்கப்படும் விமான சேவை 9.30 மணிக்கு வந்து 10 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல பயணிகளுடன் சென்னையில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு இரவு 9.30 மணிக்கு வந்தது.
சென்னை செல்லும் அமைச்சர் விஜயபாஸ்கர். கரூர் எம்பி தம்பிதுரை, தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட பயணிகள் 66 பேர் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
பின்னர் விமானத்தை பைலட் ரன்வே பகுதிக்கு இயக்கிய போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது மானிட்டரில் தெரிந்தது.
இதுகுறித்து விமானநிலைய கட்டுபாட்டு அறை மற்றும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு விமானத்தை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானம் ஏரோ பிரிட்ஜ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறக்கப்பட்டு பயணிகள் தங்கும் அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
உரிய நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமான பைலட் கண்டுபிடித்ததால் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்பி தம்பிதுரை, தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட 66 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top