vkrnajur vkrnajur Author
Title: 6.46 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: ராஜேஷ் லக்கானி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். வாக்காளர் ...
வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இதைதைத் தொடர்ந்து. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் உத்தரவின்பேரில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டன.

இந்த பணி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி செய்தியாளரிடம் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியின் கீழ், இறந்த வாக்காளர்கள், இருமுறை பெயருள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

இறந்த வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 பேரின் பெயர்கள் நீக்கப்பட்ட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்கள் என்ற அடிப்படையில், 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், ஒரே வாக்காளர் எண் கொண்டதாக அறியப்பட்ட 7 ஆயிரத்து 500 பேரின் பெயர்களும், பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7 ஐ அளித்த 97 ஆயிரம் பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகளின் அடிப்படையில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேரின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7 ஐ அதிகளவு அளித்தால், இந்த 6 லட்சத்து 46 ஆயிரம் என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top