vkrnajur vkrnajur Author
Title: 5G நெட்வர்க்கை உருவாக்கும் முயற்சியில் லண்டன் சாதனை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கில்டுபோர்டு : தற்போது 4G நெட்வொர்க்கில் ஒரு படத்தை டவுண்லோடு செய்ய ஏறத்தாழ 8 நிமிடங்கள் வரை ஆகிறது. விரைவில் 5 நொடிகளில் ஸ்மார்ட்போன்...
கில்டுபோர்டு : தற்போது 4G நெட்வொர்க்கில் ஒரு படத்தை டவுண்லோடு செய்ய ஏறத்தாழ 8 நிமிடங்கள் வரை ஆகிறது. விரைவில் 5 நொடிகளில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளில் படத்தை அதிவேகமாக டவுண்லோடு செய்யும் அளவிற்கு 5G நெட்வொர்க்கை உருவாக்குவதில் லண்டன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அங்குள்ள சர்ரே பல்கலைக்கழகம் 2011 பிற்பாதியில் இருந்தே இதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு சாம்சங், புஜித்சு உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களும் ஆதரவளித்து வருகின்றன. 5G அதிவேக இண்டர்நெட் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக சர்ரே பல்கலைக்கழக வளாகத்தில் 2 சதுர மைல் பரப்பளவில் 70-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ரேடியோ ஆண்டனாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள 5G ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பலன்களையும், முடிவுகளையும் இன்று முதல் பார்சிலோனாவில் நடக்க உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, ஜப்பானை சேர்ந்த டொகோமோ, ATT மற்றும் NTT, சுவீடனை சேர்ந்த எரிக்சன், சீனாவின் ஹூவேய் ஆகிய நிறுவனங்கள் 5G நெட்வொர்க்கில் முன்னிலையில் இருக்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. அனைத்து டிஜிட்டல் கருவிகளிலும் இயங்கும் வகையிலான 5G அதிவேக இண்டர்நெட் வரும் 2018-க்குள் பரவலாக அறிமுகமாகும் என சர்ரே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top