vkrnajur vkrnajur Author
Title: ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு 57 ஆயிரம் பேர் எழுதினார்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சென்னை, கல்லூரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 57 ஆயிரம் பேர் எழுதினார்கள்.ஸ்லெட் தேர்வு கல்லூரிகளில் உத...
சென்னை, கல்லூரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 57 ஆயிரம் பேர் எழுதினார்கள்.ஸ்லெட் தேர்வு
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிய அவர்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அந்தந்த மாநிலங்கள் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.தமிழ்நாட்டைப் பொருத்தவரை ‘ஸ்லெட்’ என்ற தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. இந்த வருடம் அந்த தேர்வை நடத்தும் பொறுப்பை கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்திடம் பல்கலைக்கழக மானியக்குழு ஒப்படைத்தது.57 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை(ஸ்லெட் தேர்வு) அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் நேற்று நடத்தியது.இந்த தேர்வு சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்பட 16 நகரங்களில் நடத்தப்பட்டது. இதற்காக தேர்வு மையங்கள் 66 ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மையங்கள் பெரும்பாலும் கல்லூரிகளில் இடம் பெற்றிருந்தன.சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரி, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி ஆகியவற்றில் நேற்று நடைபெற்றது. காலை 9.30 மணி, 11.10, 2.00 மணி என்று 3 பிரிவாக 3 தாள்கள் கொண்ட தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 57 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top