vkrnajur vkrnajur Author
Title: ஒரு ஏப்பத்திற்கு ரூ5500 !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை சேர்ந்தவர் எடின் மெகிக் இவர் மதுபான பாரில் ஊழியராக பணிபுரிறார். இவர் அதிக அளவு வெங்காயம் கலந்து கைபேப் என்ற உண...
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை சேர்ந்தவர் எடின் மெகிக் இவர் மதுபான பாரில் ஊழியராக பணிபுரிறார். இவர் அதிக அளவு வெங்காயம் கலந்து கைபேப் என்ற உணவை சாப்பிட்டார்.

அதன் பின்னர் வியன்னாவில் மிகவும் புகழ்பெற்ற பிராடர் பூங்காவில் காலாற வாக்கிங் சென்றார். அதன் பின்னர்

இருந்த இடத்தில் பலத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டார்.
அப்போது திடீரென ஒரு கை அவரது தோள் பட்டையை பலமாக பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திரும்பி பார்த்தார். அங்கு சீருடையில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்.

அவரிடம் உங்களை கைது செய்கிறேன் என்றார். உடனே எடின் எதுவும் தெரியாமல் ஏன் என்னை கைது செய்ய வேண்டும் என திருப்பி கேட்டார்.

அதற்கு அவர் “நீங்கள் பொது நாகரீகம் இன்றி பலத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டீர்கள். இது பொது மக்களுக்கு இடையூறு அளித்துள்ளது” என்றார்.

அதை தொடர்ந்து எடின் மெகிக்கு 70 யூரோ அதாவது ரூ.5500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவலை அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top