vkrnajur vkrnajur Author
Title: இந்தியா சூரிய மின் சக்தி 5,000 மெகாவாட் என்ற இலக்கை எட்டியது! மத்திய அரசு தகவல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நாடு முழுவதிலும் 5,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...
நாடு முழுவதிலும் 5,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சூரிய மின்சக்தி நிலையங்கள் மூலம் 18,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அரசு நம்பிக்கையுடன் கூறியுள்ளது. மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற ஆலோசனைக் குழு, திருப்பதியில் கூடி ஆலோசனை நடத்தியது.
அப்போது, நாடு முழுவதிலும் இயங்கி வரும் சூரிய மின்சக்தி நிலையங்களின் செயல்பாடு மற்றும் மாசுபாட்டைக் குறைக்கவும், தரத்தை மேம்படுத்தவும் தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அந்தக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தற்போது உற்பத்தி செய்யப்படும் 35,000 மெகா வாட் மின்சாரத்தை, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகமாக உயர்த்தி 175 ஜிகா வாட் மின்சாரம் தயாரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கோயல் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற பிற எம்.பி.க்கள் பேசுகையில், சூரிய மின் தகடு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தெரிவித்தனர். இதனிடையே, மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதிலும் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி நிலையங்களின் உற்பத்தித் திறன் 5,000 மெகா வாட் என்ற நிலையில் இருப்பதாகவும், இதனை 18,000 மெகா வாட் என்ற அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top