vkrnajur vkrnajur Author
Title: ஜான்சன் பொருள்களை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் - 492 கோடி இழப்பீடு வழங்கஉத்தரவு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட கருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணின் குடு...
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் ஏற்பட்ட கருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 492 கோடி  இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர்  ஜேக்கி ஃபாக்ஸ். இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபாக்ஸ் அண்மையில் இறந்தார்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே ஃபாக்ஸுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டது என கூறி, அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஃபாக்ஸூக்கு 73 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 292 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top