vkrnajur vkrnajur Author
Title: இந்தியா 45 ரன்- வித்தியாசத்தில் அபார வெற்றி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,...

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பையை இம்முறை 20 ஓவர் வடிவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த தொடரின் முதல் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இதில் வங்காளதேச அணியை இந்தியா எதிர் விளையாடியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி முதலில் பந்து விசீயது. இதனால், இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் இந்திய அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாட்டை துவங்கியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 166  ரன்கள் எடுத்தது.
இதனால், 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் கண்டது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து தனது ஆட்டத்தை வங்கதேச அணி நிறைவு செய்தது. இதனால், இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில், தவான் 2 ரன்கள், விராட் கோலி 8 ரன்கள், சுரெஷ் ரெய்னா 13 ரன்கள், யுவராஜ் சிங் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததால், இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
அடுத்து, ரோகித் சர்மா 55 பந்துகளில் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மேலும், 18 பந்துகளில் 31 ரன்கள் விளாசிய  பாண்டையாவும் வெளியேறினார்.
இதே போல, வங்கதேச அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான சவும்யா சர்கார் 11 ரன்னும், முகமது மிதுன் 1 ரன்னும், இம்ருல் கயேஸ் 14 ரன்னும், ஷகீப் அல் ஹசன் 3 ரன்களும், மகமதுல்லா 7 ரன்களும், மஷ்ரபி மோர்டாசா ரன் ஏதும் எடுக்காமலே அவுட் ஆனார். இதில், சபீர் ரஹ்மான் 44 ரன்கள் எடுத்து நிமிர்ந்து நின்று அவரும் வெளியேறினார். முடிவில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தான் இந்திய அணி வெற்றிக்கனியை ருசிக்கவும், ரசிக்கவும் முடிந்தது.
45 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். இந்தியா முழுதுவம் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். மேலும், அடுத்த அடுத்த விளையாட்டிலும் இந்திய அணி வெற்றியை குவிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட இந்த வெற்றி வாய்ப்பு கைகொடுத்துள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top