vkrnajur vkrnajur Author
Title: பிரீடம் 251 பற்றி முழு விபரம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உலகின், மிக மலிவான, “பிரீடம் 251″ என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், “திட்டமிட்...
உலகின், மிக மலிவான, “பிரீடம் 251″ என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், “திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்” என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டில்லியை அடுத்துள்ள நொய்டாவை தலைமையிடமாக வைத்து, “ரிங்கிங் பெல்ஸ்” நிறுவனம், 251 ரூபாய் விலை உடைய, ஸ்மார்ட் மொபைல் போனை, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. நேற்று காலை, முன்பதிவு துவங்கிய, சில நிமிடங்களிலேயே, அதன் இணையதளம் முடங்கியது. “வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சி செய்ததால், முன்பதிவு செய்ய முடியவில்லை. இந்த தொழில்நுட்ப பிரச்னையை சரி செய்வதற்கு, 24 மணி நேரம் ஆகும்; அதற்கு பின், மீண்டும் முன்பதிவு துவங்கும்” என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாத்தியக்கூறுகள்:மலிவு விலைக்கு மொபைல் போன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மொபைல் போன் தயாரிப்பு சங்கங்கள் சந்தேகங்களை கிளப்பிஉள்ளன. ஆனாலும், “திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்” என, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வாய்ப்பே இல்லை: சங்கம் எதிர்ப்பு
“ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளபடி, 251 ரூபாய்க்கு, ஸ்மார்ட் மொபைல் போனை விற்கவே முடியாது; இது குறித்து, மத்திய அரசு விசாரிக்க வேண்டும்” என, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, இந்திய செல்லுலார் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.சங்கத் தலைவர் பங்கஜ் மோகிந்த்ரூ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு
உள்ளதாவது:இந்தியாவில், மொபைல் போன் தயாரிப்புக்கென, அரசு எந்தவித மானியமோ, சலுகையோஅளிப்பதில்லை. 3,500 ரூபாய்க்கும் குறைவான விலையில், ஸ்மார்ட் மொபைல் போன்களை விற்க முடியாது. இந்த நிறுவனம், இதுவரை மொபைல் தயாரிப்பில் ஈடுபட்டதில்லை. “251 ரூபாய்க்கு மொபைல் போன்” என அறிவிப்பு வந்ததுமே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து தொலைத்தொடர்பு துறை தீவிரமாக ஆராய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
251 ரூபாய்க்கு எப்படி சாத்தியம்?
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா கூறியதாவது:இந்த மொபைல் போனின் தயாரிப்பு செலவு, 2,500 ரூபாய். ஆனால், விற்பனையில் புதுமை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரி சலுகை போன்ற பல்வேறு காரணங்களால், இந்த போனை, 251 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மொபைல் போன் உதிரி பாகங்களுக்கு, 13.8 சதவீதம், வரி சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு மொபைல் போனுக்கு, 470 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, ஒரு மொபைலுக்கு, 530 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.
நேரடி விற்பனையில்லாமல், “ஆன்லைன்” மூலமாக விற்பதால், 460 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு, பல்வேறு வகையில் சேமிக்கப்படும் தொகையை, வாடிக்கையாளருக்கே தருகிறோம். வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு பின், 800 ரூபாய்க்கு இந்த போனை விற்க வேண்டும்; ஆனால், 251 ரூபாய்க்கு விற்கிறோம். மிகக் குறைந்த விலையில் விற்பதால், சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்போம். சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும்போது, பல்வேறு பொருட்களை நாங்கள் விற்க முடியும்; அந்த வகையில், இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். எங்கள் நிறுவனத்தை, “ஆன்லைன் ஷாப்பிங் மாலாக” மாற்ற திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் மிகப் பெரிய லாபத்தை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top