vkrnajur vkrnajur Author
Title: பீரிடம்251 ஃபோன் வாங்க 7 கோடி பேர் ஆன்லைன் பதிவு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மிகக் குறைந்த விலையில் ரூ.251 க்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்க விரும்பி ஆன் லைன் மூலம் 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல் நிறுவ...
மிகக் குறைந்த விலையில் ரூ.251 க்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்க விரும்பி ஆன் லைன் மூலம் 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல் நிறுவன அதிபர் மோஹித் கோயல் கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் ஒரு புதியரக ஃபோனை தயாரித்துள்ள “ரிங்கிங் பெல்” என்ற இந்திய நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக இன்று திகழும் மோஹித் கோயல் “ஃப்ரீடம் 251″ என்ற பெயரில் 251 ரூபாய் விலையில் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஃப்ரீடம் 251 நேற்று(சனி) முன்தினம் மாலை டெல்லியில் வெளியிடப்பட்டது. ஃப்ரீடம் 251 போனை வாங்குவதற்கான முன்பதிவு காலை 6 மணி முதல் http://freedom251.com/ என்ற இணையதளத்தில் தொடங்கும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. மார்க்கெட்டில் உள்ள உயர்ந்த விலை செல் ஃபோன்களுக்கு இணையாக பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட ஃபோனாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த மோஹித், “ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்” போனுக்கான முன்பதிவு தொடங்கிய 18-ம் தேதியில் இருந்து இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமானவர்கள் எங்களிடம் முன்பதிவு செய்துள்ளனர். இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில் சில்லரை விற்பனை மூலம் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன்கள் அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக, பெறப்படும் பணம் அத்தனையும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் ஃபோன்களை டெலிவரி செய்வதற்கு முன்பாக அந்த பணத்தை நாங்கள் தொடக்கூட மாட்டோம். இந்த மாதிரியான ஃசெல்போன்களின் அடக்கவிலை சுமார் 1500 ரூபாய்வரை ஆகிறது. நாங்கள் தைவான் நாட்டில் இருந்து நேரடியாக உதிரிபாகங்களை கொள்முதல் செய்து குர்கானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அவற்றை வைத்து ஃசெல்போனை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்.
மேலும், ஆன்லைன் மூலம் நேரடி மார்க்கெட்டிங்கில் இறங்குவதால் இதுபோன்ற வர்த்தகங்களில் உள்ள முகவர் கமிஷன், விளம்பர செலவு, சரக்கு போக்குவரத்து செலவு போன்றவை கணிசமாகக் குறையும். இதர நிறுவனங்களின் ஆப்ஸை எங்களது ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்துவதால் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் கமிஷனையும் பொதுமக்களுக்கே வழங்கும் வகையில் முடிவுசெய்துதான் 251 ரூபாய்க்கு இவற்றை விற்பதாக அறிவிப்பு வெளியிட்டோம். இந்த விலைக்கே விற்றாலும் எங்களுக்கு ஒரு ஃபோனுக்கு 31 ரூபாய்வரைதான் லாபம் கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top